ஆள்கூறுகள்: 10°26′24″N 77°31′05″E / 10.44°N 77.518°E / 10.44; 77.518

பழனி

தமிழர்விக்கியிலிருந்து
49.206.123.224 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 06:25, 20 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (சங்ககாலம்)
Jump to navigation Jump to search
பழனி
—  தேர்வு நிலை நகராட்சி  —
பழனி
அமைவிடம்: பழனி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°26′24″N 77°31′05″E / 10.44°N 77.518°E / 10.44; 77.518
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், இ. ஆ. ப [3]
நகராட்சித் தலைவர் ஆர்.வேலுமணி
ஆணையர் மூர்த்தி
மக்கள் தொகை

அடர்த்தி

67,231 (2001)

10,140/km2 (26,262/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6.63 சதுர கிலோமீட்டர்கள் (2.56 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/palani/
பழனி மலையின் தோற்றம்
பெரிய பள்ளிவாசல்
கோடைக்கானலிருந்து பாலாறு-பொருந்தலாறு அணையின் தோற்றம்

பழனி (Palani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்குள்ள மலையில் 18 சித்தர்களில் ஒருவரான போகரால் ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு சிலை செய்த புகழ் பெற்ற முருகன் மலைக்கோவில் இருக்கிறது. இவ்வூரில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருஆவினன்குடி கோவிலும் உள்ளது.2013 ஆம் ஆண்டில் சங்ககால ஓவியங்கள் ஆண்டிப்பட்டி மலை, பழனியில் கண்டுபிடிக்கப்பட்டன.

சங்ககாலம்

இவ்வூரின் சங்ககாலப் பெயர் பொதினி
சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும். “தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்” என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார். முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதாக நக்கீரர் சொல்லவில்லை. வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி என்பது அதன் பொருள். ஆகையால் நக்கீரர் குறிப்பிடும் கோயிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு வேறு. நக்கீரருக்குப் பிறகு வந்த போகர் உருவாக்கியதுதான் பழனியாண்டவர் மலைக்கோயில்.
வையாவி கோப்பெரும் பேகன் என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் ஆவியர்குடி. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 67,175 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பழனி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பழனி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வழிபாட்டுத்தலங்கள்

பழநி மிகப்புகழ் பெற்ற கோயில் நகரமாகும்.

இந்து வழிபாட்டுத்தலங்கள்

  • அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்(பழனி மக்கள் சாமியா மலை என அழைப்பர்)
  • திருவாவினன்குடி முருகன் கோவில் (அறுபடை வீடுகளில் மூன்றாம்படைவீடு)
  • பெருமாள் கோயில்
  • பெரியநாயகி அம்மன் கோயில்(யானைக்கோயில்)
  • ரெணகாளியம்மன் கோயில்.
  • மாரியம்மன் கோயில்
  • பட்டத்து விநாயகர் கோயில்
  • பெரியாவுடையார் கோயில்
  • இடும்பன் மலைக் போயில்

இசுலாமிய வழிபாட்டுத் தலங்கள்

  • பெரிய பள்ளிவாசல்
  • சின்ன பள்ளிவாசல்
  • அல் ஃபலாஹ் பள்ளிவாசல்
  • மஸ்ஜிதுர் ரஹ்மான்(JAQH)

சுற்றுலாத் தலங்கள்

கல்வி நிறுவணங்கள்

கல்லூரிகள்

  • அருள்மிகு பழநி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி
  • அருள்மிகு பழநி ஆண்டவர் பெண்கள் கலை கல்லூரி
  • திரு சுப்ரமணியா பொறியியல் கல்லூரி
  • திரு சுப்ரமணியா கலை மற்றும் அறிவியியல் கல்லூரி

பல்தொழில் நுட்பப்பயிலகம்

  • அருள்மிகு பழநி ஆண்டவர் ஆண்கள் பல்தொழில் நுட்பப்பயிலகம்
  • திரு பாலமுருகன் பல்தொழில் நுட்பப்பயிலகம்

பள்ளிகள்

  • நகராட்சி மேனிலைப் பள்ளி,பழனி
  • ஐடிஓ மேனிலைப் பள்ளி, ஆயக்குடி
  • தேவி மேனிலைப் பள்ளி
  • புனித ஜோசப் மேனிலைப் பள்ளி
  • புனித பால் மேனிலைப் பள்ளி
  • லிட்டில் ப்ளவர் நடுநிலை பள்ளி
  • அக்‌ஷயா மேனிலைப் பள்ளி
  • சிரீ ரேணுகாதேவி மேனிலைப் பள்ளி
  • சுவாமி மெட்ரிக் மேனிலைப் பள்ளி

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பழனி&oldid=191710" இலிருந்து மீள்விக்கப்பட்டது