வல்லம்
| வல்லம் | |
| — பேரூராட்சி — | |
| அமைவிடம் | 10°43′N 79°05′E / 10.72°N 79.08°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| வட்டம் | தஞ்சாவூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| பேரூராட்சி மன்றத் தலைவர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
16,758 (2011[update]) • 2,205/km2 (5,711/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
7.6 சதுர கிலோமீட்டர்கள் (2.9 sq mi) • 75 மீட்டர்கள் (246 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/vallam |
வல்லம் (ஆங்கிலம்:Vallam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
திருச்சி -- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை எண் 67-இல் அமைந்த வல்லம் பேரூராட்சி, தஞ்சாவூரிலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
7.6 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 191 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,840 வீடுகளும், 16,758 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
வரலாறு
- சங்ககாலத்தில் வல்லம். வல்லங்கிழவோன் நல்லடி, வல்லத்துப் புறமிளை ஆரியர் படை உடைந்தது.
- சம்பந்தர் பாடிய பாடிய வல்லம்
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°43′N 79°05′E / 10.72°N 79.08°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 75 மீட்டர் (246 அடி) உயரத்தில் இருக்கின்றது.
கல்வி நிறுவனங்கள்
வரலாற்று பெருமை நிறைந்த இவ்வூரில் இன்று பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் பிரிஷ்ட் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இங்கு உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகும். மேலும், அடைக்கலமாதா கல்லூரி, சுவாமி விவேகானந்தா கல்லூரி மற்றும் மருது பாண்டியர் கல்லூரி போன்ற கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளும் இங்கு உள்ளன.
வெளி இணைப்புகள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ வல்லம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/vallam/population
- ↑ Vallam Population Census 2011
- ↑ Vallam Town Panchayat
- ↑ "Vallam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)