பத்மினி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 11:11, 13 சனவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (விருதுகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பத்மினி ராமச்சந்திரன்
1950-இல் பத்மினி
பிறப்புபத்மாவதிதேவி (சுருக்க பெயராக பத்மினி)
(1932-06-12)சூன் 12, 1932 [1]
திருவனந்தபுரம், திருவிதாங்கூர்
இறப்புSeptember 24, 2006(2006-09-24) (aged 74)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்நாட்டியப்பேரொளி, பப்பிமா
சமயம்இந்து
பெற்றோர்தந்தை : தங்கப்பன் நாயர்
தாயார் : சரஸ்வதி
வாழ்க்கைத்
துணை
டாக்டர். இராமச்சந்திரன்

பத்மினி (சூன் 12, 1932 - செப்டம்பர் 24, 2006) பிரபல இந்திய நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்றவர். நாட்டியப் பேரொளி எனப் பெயர் எடுத்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன், சரஸ்வதி ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். இவர்களது பெரிய தாயாரின் கலை ஆர்வமே இவர்களை நடனத்தில் ஈடுபடச் செய்தது. பெரிய தாயாருக்கு மலாயாவில் இரப்பர் தோட்டங்கள் இருந்தன. திருவாங்கூரில் பல தொழில் நிறுவனங்களில் இயக்குநராக இருந்தவர்.[2] மற்றொரு பெரிய தாயார் திருவாங்கூர் மகாராணியின் சகோதரரின் மனைவி.[2] திருவாங்கூர் சகோதரிகளின் சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். பத்மினி 1961 ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு 1977இல் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் குடியேறினார். அங்கு பத்மினி ஸ்கூல் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தார்.

கலையுலக வாழ்வு

பத்மினி நான்கு வயதில் நாட்டியம் பயின்றார். முதலில் சகோதரிகள் திருவாங்கூர் நடன ஆசிரியர் கோபிநாத்திடம் பயிற்சி பெற்றனர்.[2] கதகளி, பரதம், மணிப்புரி ஆகிய மூன்று ஆடல் கலைகளிலும் பயிற்சி பெற்றனர்.[2] பத்து வயதில் அரங்கேறி, ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் புகழோச்சி நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்டார். குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர்.

17 வயதில் திரையுலகில் புகுந்தார். இயக்குநர் உதயசங்கர் தனது கல்பனா என்ற இந்தி மொழிப் படத்தில் முதலில் இவர்களை நடிக்க வைத்தார்.[2][3] ஆனாலும், இவர்கள் நடனமாடி வெளிவந்த முதல் திரைப்படம் கன்னிகா (1947) என்பதாகும். இப்படத்தில் சிவமோகினி வேடத்தில் நடனமாடினார்.[2] பின்னர் வேதாள உலகம் படத்தில் நடனமாடினார். என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த மணமகள் என்ற படத்தில் நடித்தார்.[2] இவை தவிர சிலோன் தியேட்டர்சின் கபாடி அரட்சகாயா என்ற சிங்களப் படத்திலும் நடனமாடினார்கள்.[2] தமிழில் சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். பத்மினி 250 படங்களுக்கு மேல் நடித்தார். சிவாஜியுடன் 59 படங்களில் நடித்துள்ளார். தில்லானா மோகனாம்பாள், இவரின் நடிப்புக்காக பெரிதும் பாராட்டப்பட்ட திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சிக்கல் சண்முகமாக சிவாஜி கணேசனும், மோகனாங்கியாக பத்மினியும் நடித்தனர். வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினிக்கும், வைஜயந்திமாலாவிற்கும் நடக்கும் நாட்டியப் போட்டி புகழ் பெற்றதாகும்.

விருதுகள்

இறப்பு

பத்மினி, 2006 செப்டம்பர் 24 ஞாயிறு இரவு மாரடைப்பால் சென்னையில் காலமானார்.[1][3]

நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Front Page : Queen of Tamil cinema no more". Chennai, India: The Hindu. 2006-09-26 இம் மூலத்தில் இருந்து 2007-10-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071022125223/http://hindu.com/2006/09/26/stories/2006092607872200.htm. பார்த்த நாள்: 2011-06-07. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "திருவாங்கூர் நடன சகோதரிகள்". பேசும் படம்: 113-117. சனவரி 1948. 
  3. 3.0 3.1 "நாட்டியப் பேரொளி பத்மினி மறைவு" (in தமிழ்). பிபிசி. 26 செப்டம்பர், 2006. http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/09/060926_padminiobituary.shtml. பார்த்த நாள்: 2006-11-08. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பத்மினி&oldid=425897" இலிருந்து மீள்விக்கப்பட்டது