மிடாப்பாடி
| மிடாப்பாடி | |||
| — கிராமம் — | |||
| ஆள்கூறு | 10°33′34″N 77°23′55″E / 10.559319°N 77.398714°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | திண்டுக்கல் | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | துர்க்கா மூர்த்தி, இ. ஆ. ப [3] | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
|
குறியீடுகள்
| |||
மிடாப்பாடி (MIDAPADI), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம் (ஊர்)[4][5]. பழனி வருவாய் வட்டத்தில் இரண்டாவது எண் கொண்ட வருவாய்க் கிராமம் (கிராம எண்: 2) ஆகும்.[6]
அமைவிடம்
பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வயலூரிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரம் வடக்கிலும், மடத்துக்குளத்தில் இருந்து 9 கி.மீ. தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 535 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து சுமார் 1 (ஒரு) கி.மீ. தூரத்தில் மேற்கில் அமராவதி ஆறு ஓடுகிறது.[7]
மக்கள் வகைப்பாடு
2001 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், மிடாப்பாடிகிராமத்தில் 581 வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் 2,141 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 50.93%. இதில் 1,060 பேர் ஆண்கள்; 1,081 பேர் பெண்கள். இக்கிராமத்தில் ஆரம்பப் பள்ளிகள் 2 மட்டுமே உள்ளன.[8]
முக்கிய பயிர்
இங்கு அமராவதி ஆற்றின் படுகைப் பகுதியில் உயர் ரக, ஒட்டுத் தென்னை மரங்கள் அதிகம் உள்ளன. அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. தாழ்வான பகுதிகளில் தோட்டப் பயிர்களான காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.
நிருவாக அமைப்பு
- வருவாய் மாவட்டம் : திண்டுக்கல்
- வருவாய் கோட்டம் : பழனி
- வருவாய் வட்டம் : பழனி
- ஊராட்சி ஒன்றியம் : தொப்பம்பட்டி
கிராமத்தின் தகவல்கள்
- வருவாய்க் கிராமத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields): 1 முதல் 587 முடிய
- வருவாய்க் கிராமத்தின் பரப்பு : 1265.95.5 ஹெக்டேர் (3128.26 ஏக்கர்)
- வருவாய்க் கிராமத்தின் நன்செய் நிலம் :
- வருவாய்க் கிராமத்தின் புன்செய் நிலம் :
- வருவாய்க் கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
- குக்கிராமங்களின் எண்ணிக்கை :
அடிக்குறிப்பு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=13¢code=0006&tlkname= பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் palani #MAP
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. Retrieved 2015-07-19.
- ↑ திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண். 8. (ப.வெ. 509/ 2015/பி2, நாள்; 17.04.2015).
- ↑ http://wikimapia.org/#lang=ta&lat=10.559319&lon=77.398714&z=16&m=w
- ↑ http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village_Profile.aspx%7C2001-ம்[தொடர்பிழந்த இணைப்பு] ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை