மெய்கண்ட சாத்திரங்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மெய்கண்ட சாத்திரங்கள் என்பன தமிழ் நாட்டிலே சைவ சமயத்துக்குரிய அடிப்படையான தத்துவமாக எழுந்த சைவ சித்தாந்தத்தை விளக்க, 12ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதினான்கு நூல்களையும் குறிக்கும். இந்நூல்கள் பதி, பசு,பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்த்துவன.


உந்தி களிறு உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மைப் பிரகாசம் - வந்த அருட்
பண்பு வினா போற்றிக்கொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்ப முற்று"

சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.


என்பன அவையாகும். இந்தப் 14 நூல்களுள்ளும் தலை சிறந்ததாகக் கருதப்படுவது மெய்கண்டார் இயற்றிய சிவஞான போதம் ஆகும். இந்தப் 14 நூல்களும் பல்வேறு ஆசிரியர்களால் இயற்றப்பட்டிருப்பினும், இவற்றுட் தலையாய நூலை எழுதிய மெய்கண்டார் பெயரிலேயே முழுத் தொகுதியையும் மெய்கண்ட சாத்திரம் என்கின்றனர். சிவஞான சித்தியார், இருபா இருபது ஆகிய இரு நூல்களையும் இயற்றியவர் அருள்நந்தி சிவாச்சாரியார். திருவுந்தியார் திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார் என்பவராலும், திருக்களிற்றுப்படியார் திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார் என்பவராலும் எழுதப்பட்டவை. உண்மை விளக்கம் என்ற நூல் திருவதிகை மனவாசகங் கடந்தார் என்பவரால் எழுதப்பட்டது. சிவப்பிரகாசம் முதல் சங்கற்ப நிராகரணம் ஈறாகவுள்ள எட்டு நூல்களையும் இயற்றியவர் உமாபதி சிவாசாரியார் ஆவார்.