திசானா
| இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
| இந்து சமயம் |
|---|
|
தொடரின் ஒரு பகுதி |
|
மூலங்கள்
வேதங்கள் · உபநிடதம் · பிரம்ம சூத்திரம் · பகவத் கீதை · புராணங்கள் · இதிகாசங்கள் |
|
வேத தொன்மவியல்
|
|
திருப்பாற்கடல் · வைகுந்தம் · கைலாயம் · பிரம்ம லோகம் · இரண்யகர்பன் · சொர்க்கம் · பிருத்வி · நரகம் · பித்துரு உலகம் |
|
மும்மூர்த்திகள் · பிரம்மன் · திருமால் · சிவன் · சரஸ்வதி · திருமகள் · பார்வதி · விநாயகர் · முருகன் |
|
புராண - இதிகாச கதைமாந்தர்கள்
சனகாதி முனிவர்கள் · பிரஜாபதிகள் · சப்த ரிசிகள் · பிருகு · அத்திரி · கௌதமர் · காசிபர் · வசிட்டர் · அகத்தியர் · ஜமதக்கினி · தட்சன் · வால்மீகி · அரிச்சந்திரன் · ராமர் · சீதை · இலட்சுமணன் · அனுமான் · இராவணன் · புரூரவன் · நகுசன் · யயாதி · பரதன் · துஷ்யந்தன் · வியாசர் · கிருஷ்ணர் · பீஷ்மர் · பாண்டவர்கள் · கர்ணன் · கௌரவர் · விதுரன் · பாண்டு · திருதராட்டிரன் காந்தாரி · குந்தி · |
திசானா (Dhisana)(சமசுகிருதம் *திஷானா) இந்து மதத்தில் மேன்மைக்கான இந்து தெய்வமாகும். வேதங்களில் ஒன்றான இருக்கு வேதத்தின் பெரும்பாலான மண்டலங்களில் உள்ள பாடல்களில் இவரைப் பற்றிய பாடல்கள் சில உள்ளன. இவர் நெருப்பு, சூரியன், சந்திரன், நட்சத்திரங்களின் தெய்வமாகவும் குறிப்பிடப்பட்டார்.[1]
மற்ற இந்து நூல்களின்படி, திசானா என்ற பெயர் சோம பாத்திரம், அறிவு, புத்திசாலித்தனம், பேச்சு போன்ற பல்வேறு விடயங்களையும் குறிக்கிறது.[2] இருக்கு வேதத்தில் இது மிகுதியின் தெய்வம் மற்றும் புனித நெருப்பின் பாதுகாவலர் என்று குறிப்பிடப்படுகிறது.
இந்தியவியலில் மேற்கொண்ட தங்கள் ஆய்வு மற்றும் விவாதங்களில் திசானாவைக் சிலர் குறிப்பிட்டனர். இவர்களில் இருவர் செருமன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் கில்பிராண்ட் மற்றும் ரிச்சர்ட் பிஷெல் .
ஒருவர் மற்றவரால் திசானாவை சொர்க்கம் மற்றும் பூமி என்று இரு உலகங்களான ஏற்றுக்கொள்ளப்பட்டவர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஏ. கில்பிராண்ட் திசானாவை முக்கியமாகப் பூமி என்றும், அவற்றுடன் நெருங்கிய தொடர்புடைய மூன்று குழுவைப் பூமி, வளிமண்டலம் மற்றும் சொர்க்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார். வேறு சில இந்து நூல்கள் திசானாவை இரட்டைத் தளங்களாகக் குறிப்பிட்டுள்ளன. இவற்றின் மீது சோமனின் செயல்பாடு நடந்துள்ளன.
ஆர். பிஷெல், திசனாவை அதிதி மற்றும் பூமியைப் போன்ற செல்வத்தின் தெய்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.[3] இருக்கு வேதத்தில் உள்ள மண்டலங்களிலும், பாடல்களிலும் இந்தத் தெய்வம் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.
| மண்டலா, பாடல் அட்டவணை | பாடல் உரை |
|---|---|
|
|
மேற்கோள்கள்
- ↑ Carroll, Barbara (2015-12-15). Gods, Goddesses, and Saints: A Solitary Practice of Chanting and Meditation (in ஆங்கிலம்). Outskirts Press. ISBN 9781478747000.
- ↑ "Dhīşaņā - Hindupedia, the Hindu Encyclopedia". www.hindupedia.com (in ஆங்கிலம்). Retrieved 2017-11-28.
- ↑ Macdonell, Arthur Anthony; Keith, Arthur Berriedale (1912). Vedic index of names and subjects. Robarts - University of Toronto. London, Murray.
- ↑ "Dhisana - AncientVoice". ancientvoice.wikidot.com (in ஆங்கிலம்). Retrieved 2017-11-22.