பாந்த்ரா
பாந்த்ரா | |
|---|---|
மும்பை புறநகர் | |
பாந்திரா-வொர்லி கடற்பாலம், பாந்த்ரா குர்லா வளாகம், PWC அலுவலகம், மும்பை பாண்ட்ஸ்டாண்ட் உலாவும் தளம், பாந்த்ரா மசூதி & ஐசிஐசி வங்கி | |
மகாராட்டிராவின் பெருநகரமும்பை மாநகராட்சியில் பாந்திராவின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 19°03′16″N 72°50′26″E / 19.054444°N 72.840556°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரா |
| மாவட்டம் | மும்பை புறநகர் மாவட்டம் |
| நகரம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
| மண்டலம் | 3 |
| வார்டு | எச் மேற்கு |
| அரசு | |
| • வகை | மாநகராட்சி |
| • நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
| மக்கள்தொகை (2017) | |
| • மொத்தம் | 3,37,391[1] |
| இனங்கள் | Mumbaikar |
| மொழிகள் | |
| • அலுவல் | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 400050, 400051 |
| வாகனப் பதிவு | MH-02 |
| மக்களவை தொகுதி | வடமத்திய மும்பை மக்களவைத் தொகுதி மும்பை வடக்கு மக்களவை தொகுதி |
| சட்டமன்ற தொகுதி | பாந்த்ரா மேற்கு & கிழக்கு சட்டமன்றத் தொகுதிகள் |
பாந்த்ரா (Bandra) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பெருநகரமும்பை மாநகராட்சியில் அமைந்த பகுதிகளில் ஒன்றாகும். இது மும்பை பெருநகர மாநகராட்சியில், மண்டலம் எண் 3-இல், வார்டு எண் எச் மேற்கில் அமைந்துள்ளது. மும்பை மாவட்டத்தையும் - பாந்தரா நகரத்தையும் பிரிக்கும், மித்தி ஆற்றின் கரையில், மும்பை புறநகர் மாவட்டத்தில் பாந்த்ரா நகரம் அமைந்துள்ளது. [2] பாந்திரா நகரம், கிழக்கு பாந்திரா மற்றும் மேற்கு பாந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. மகாராட்டிராவில் மும்பை, புனே நகரகளுக்கு அடுத்து இந்நகரம் மூன்றாவது பெரிய வணிக மையமாக உள்ளது.
அருகமைந்த பகுதிகள்
பாந்திரா நகரம் மித்தி ஆற்றாங்கரையில் உள்ளது. பாந்தரா நகரத்திற்கு அருகே தாராவி, கர், குர்லா, மாகிம், சாந்தகுரூஸ் பகுதிகள் உள்ளது.
போக்குவரத்து
பாந்திரா கிழக்கில் இரயில்வே நிலையம் உள்ளது. பாந்திரா-வொர்லி கடற்பாலம் பாந்திராவையும், மத்திய மும்பையையும் இணைக்கிறது.
மேற்கோள்கள்
- ↑ "Mumbai Wards & Districts: Population & Density by Sector 2001". www.demographia.com.
- ↑ Bandra Is Changing But It Isn't Being Gentrified, 21 ஏப்பிரல் 2014, archived from the original on 18 அக்டோபர் 2014, retrieved 10 அக்டோபர் 2015