குவளை (மலர்)

தமிழர்விக்கியிலிருந்து
imported>Lingam பயனரால் செய்யப்பட்ட 08:38, 17 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{taxobox |image = N.Odorata.jpg |regnum = தாவரம் |unranked_divisio = பூக்கும் தாவரம் |ordo = Nymphaeales |name= குவளை |familia = அல்லி |genus = ''Nymphaea'' |species = '''''N. odorata''''' |binomial = ''Nymphea odorata'' |binomial_authority = Aiton |}} '''குவளை''' அல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
குவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
N. odorata
இருசொற் பெயரீடு
Nymphea odorata
Aiton

குவளை அல்லது வெள்ளை அல்லி எனப்படுவது ஒரு நீர்த்தாவரமும் நிம்பியா குடும்பத் தாவரமும் ஆகும்.

குவளை மலர் குளத்தில் பூக்கும். இது மலைப்பகுதி மகளிர் பறித்துக் குவித்து விளையாடியதாகச் சங்கநூல் குறிப்பிடும் மலர்களில் ஒன்று.[1]

இதில் செங்குவளை, கருங்குவளை, வெண்குவளை என்றெல்லாம் பல வகைகள் உண்டு.

குவளை மலரின் மொட்டு மகளிரின் கண்ணுக்கு உவமையாகக் கூறப்படும்.[2]

குவளை - மணமுள்ள மலர்
ஆம்பல் - மணமில்லா மலர்
இரண்டும் குளத்தில் பூக்கும் [3]

இவற்றையும் பார்க்கவும்

-சங்ககால மலர்கள்

வெளியிணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. குறிஞ்சிப்பாட்டு (அடி 63)
  2. காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
    மாணிழைக் கண்ணொவ்வோம் என்று. - திருக்குறள்

  3. ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
    விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா
    பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்
    கருமங்கள் வேறு படும். நாலடியார் 236
"https://tamilar.wiki/w/index.php?title=குவளை_(மலர்)&oldid=95004" இலிருந்து மீள்விக்கப்பட்டது