சுப்ரதீகம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சுப்ரதீகம் யானை மேல் அமர்ந்து போரிடும் பகதத்தன் சிற்பம், சென்னகேசவர் கோயில், பேளூர்

சுப்ரதீகம் (Supratika), மகாபாரத காவியத்தில் கூறப்படும் பிராக்ஜோதிச நாட்டின் முதிய மன்னர் பகதத்தனின் போர் யானை ஆகும். குருச்சேத்திரப் போரில் பகதத்தனும், அவனது பலம் மிக்க சுப்ரதீகம் என்ற யானையும் கௌரவர் சார்பாக, பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டனர். இந்த போர் யானை மிகவும் பலம் கொண்டதுடன், எதிரிகளை கண்டறிந்து கொல்லும் ஆற்றலும் கொண்டது. போரில் பீமனை அலைக்கழித்த சுப்ரதீகம் யானை[1][2], இறுதியில் அருச்சுனனின் கணைகளால் வீழ்த்தப்பட்டதுடன், பகதத்தனும் மாண்டார்.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சுப்ரதீகம்&oldid=365194" இலிருந்து மீள்விக்கப்பட்டது