ராமப்பிரியா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

ராமப்பிரியா கருநாடக இசை முறையில் 52வது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். இந்த மேளத்தில் பிறக்கும் ரமாமனோகரி அசம்பூர்ண மேளபத்ததியில் 52வது மேளமாக விளங்குகிறது.

இலக்கணம்

ராமப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி132 ப த2 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 ப ம23 ரி1
  • பிரம்ம என்றழைக்கப் படும் 9வது வட்டத்தில் (சக்கரத்தில்) 4 வது இராகம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

  • பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுக்கிறது.
  • கருணைச் சுவையை வெளிப் படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
  • 16வது மேளமாகிய சக்ரவாகம் இந்த இராகத்தின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
  • இதன் முறையே கிரக பேதத்தின் வழியாக ஒரு மேளகர்த்தா இராகத்தையும் கொடுக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).

உருப்படிகள்

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி சந்தேகமுனு தியாகராஜர் ஆதி
கிருதி ஸ்மராம் யகம் முத்துசாமி தீட்சிதர் ரூபகம்
கிருதி தூக்கிய பாதத்தின் முத்துத் தாண்டவர் ரூபகம்
கிருதி சாமிசதா கோடீஸ்வர ஐயர் ஆதி
கிருதி எந்நாவில் சிறிதும் பாபநாசம் சிவன் ஆதி

ஜன்ய இராகங்கள்

ராமப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=ராமப்பிரியா&oldid=483659" இலிருந்து மீள்விக்கப்பட்டது