வில்லுக்குறி
| வில்லுக்குறி | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| வட்டம் | கல்குளம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப |
| மக்கள் தொகை • அடர்த்தி |
15,304 (2011[update]) • 1,543/km2 (3,996/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 9.92 சதுர கிலோமீட்டர்கள் (3.83 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/villukuri |
வில்லுக்குறி (Villukuri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியப் பகுதியில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு மேம்பால பாசனவாய்க்கால் உள்ளது. இதனருகில் மாம்பழத்துறை ஆறு, அணைக்கட்டு மற்றும் மேம்பால பாசனவாய்க்கால் உள்ளன.
அமைவிடம்
கன்னியாகுமரியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள வில்லுக்குறி பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம், 7 கி.மீ. தொலைவில் இரணியலில் உள்ளது.
அருகமைந்த ஊர்கள்
வில்லுக்குறி பேரூராட்சிக்குக் கிழக்கே நாகர்கோவில் 12 கி.மீ.; மேற்கே தக்கலை 6 கி.மீ.; தெற்கே திங்கள்நகர் 8 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
9.92 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 4,037 வீடுகளும், 15,304 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5][6]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ வில்லுக்குறி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ வில்லுக்குறி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Villukuri Population Census 2011
- ↑ [ https://indikosh.com/city/702606/villukuri Villukuri Town Panchayat]