கீரவாணி
Jump to navigation
Jump to search
கீரவாணி (Keeravani) என்பது கருநாடக இசையில் 21வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த இராகத்தின் பெயர் கிரணாவளி. விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுப்பதுடன், பக்தி சுவையையும் வெளிப்படுத்தும். எப்போதும் பாடலாம்.[1][2]
இலக்கணம்
| ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம1 ப த1 நி3 ஸ் |
| அவரோகணம்: | ஸ் நி3 த1 ப ம1 க2 ரி2 ஸ |
- வேத என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தில் 3வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) , காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
- பிரதியாகத கமகம் இந்த இராகத்தின் சாயலை நன்கு வெளிப்படுத்தும்.
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் சிம்மேந்திரமத்திமம் ஆகும்.
- இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் மத்திமம், பஞ்சமம், தைவதம் முறையே கிரக பேதத்தின் வழியாக ஹேமவதி (58), வகுளாபரணம் (14), கோசலம் (71) இராகங்கள் கொடுக்கும்.
- மேல்நாட்டு இசையில் ஹார்மோனிக் மைனர் (Harmonic Minor Scale) என்பது கீரவாணி இராகமே.
உருப்படிகள்
- கிருதி : கலிகியுண்டேகதா : ஆதி : தியாகராஜ சுவாமிகள்.
- கிருதி : இன்னமும் சந்தேக :மிஸ்ர சாபு : கோபாலகிருஷ்ண பாரதியார்
- கிருதி : தேவி நீயே : ஆதி : பாபநாசம் சிவன்.
- கிருதி : வேலவா வினை தீர : மிஸ்ர ஜம்பை : கோடீஸ்வர ஐயர்.
- கிருதி : உனை நம்பினேன் ஐயா : ஆதி : முத்துத் தாண்டவர்.
ஜன்ய இராகங்கள்
கீரவாணியின் ஜன்ய இராகங்கள் இவை.
- குலபூஷணி
- சாமந்தசாளவி
- கல்யாணவசந்தம்
- நாகதீபரம்
- ரிஷிப்பிரியா
- உகவாணி
- சந்திரிகா
- சிவிகா
- பானுப்பிரியா
- ஸ்ரோத்தஸ்வினி
- கதரம்
திரையிசைப் பாடல்கள்
கீரவாணி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:
- "சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது..."
- " பாட்டு பாடவா பாடம் சொல்லவா... " -
- " போவோமா ஊர்கோலம்... " - சின்னத்தம்பி
- " என்னைத் தாலாட்ட வருவாளா... " - காதலுக்கு மரியாதை
- " நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று... "- பொன்னுமணி
- " கீரவாணி... "- பாடும் பறவைகள்
- " மாங்குயிலே... "- கரகாட்டக்காரன்
- எவனோ ஒருவன்-அலைபாயுதே