கன்னடா
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கன்னடா இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த மத்திமம் (ம1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), ,காகலி நிசாதம் (நி3), சதுச்ருதி ரிசபம் (ரி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
| ஆரோகணம்: | ச ம1 க3 ம1 ப ம1 த2 நி3 ச் |
| அவரோகணம்: | ச் நி3 ச த2ப ம1 க3 ம1 ரி2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ சம்பூரண" இராகம் என்பர். இதன் ஆரோகணத்தில் மத்திமமும், அவரோகணத்தில் சட்சம், மத்திமம் என்பனவும் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு இருசுர வக்கிர இராகம் ஆகும்.