நவரோஜ்
Jump to navigation
Jump to search
நவரோஜ் இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். பண்டைய தமிழிசைப் பண்களில் காந்தாரம் என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.[1]
இலக்கணம்
இந்த இராகத்தில் பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3), சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
| ஆரோகணம்: | ப த2நி3 ச் ரி2 க3 ம1 ப |
| அவரோகணம்: | ம1 க3 ரி2 ச நி3 த2ப |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமைந்துள்ளன. இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூர்ண" இராகம் என்பர்.
மேற்கோள்கள்
- ↑ அ. கி. மூர்த்தி (1998). சைவ சித்தாந்த அகராதி. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 161.