ஆடுதுறை - 17 (நெல்)
| ஆடுதுறை - 17 ADT 17 |
|---|
| வேளாண் பெயர் |
| கோனை குறுவை |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| நல் விதைத் தேர்வு முறை |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 160 - 165 நாட்கள் |
| மகசூல் |
| 4200 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 1938 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
ஏ டி டீ - 17 (ADT 17) (வட்டார வழக்கு கோனை குறுவை (Konakuruvai) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
வெளியீடு
தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[2] 1938 ஆம் ஆண்டு, இந்த நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]
காலம்
நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 165 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், சம்பா மற்றும் தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[1]
சாகுபடி
நீர்ப்பாசன வசதியுள்ள தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சாகுபடி செய்ய ஏற்றதும், நீர்மூழ்கிக் குலைவை தாங்கி வளரும் தன்மையுடையதுமான இந்த நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]
குறிப்புகள்
இதன் தானியமணிகள் தடித்து குட்டையாக உள்ளது. இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.[1]
இவற்றையும் காண்க
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. Retrieved 2017-08-13.
- ↑ 2.0 2.1 "Rice Knowledge Management Portal ADT 17". www.rkmp.co.in (தமிழ்) - 2011. Archived from the original on 2019-04-30. Retrieved 2019-04-30.
{{cite web}}: Unknown parameter|dead-url=ignored (help)