ஆடுதுறை - 52
| ஆடுதுறை - 52 ADT 52 |
|---|
| வேளாண் பெயர் |
| ADT 52 (IET 25521) (AD 13121) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| CR 1009 x ஆடுதுறை - 49[1] |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 145 - 150 நாட்கள்[1] |
| மகசூல் |
| 6050 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 2018[2] |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
ஆடுதுறை - 52 அல்லது ஏடிடீ - 52 (ADT 52), முன்மொழிவு எண்: (IET 25521), சுட்டுப் பெயர்: (AD 13121) எனப்படும் இந்த நெல் வகை, CR 1009 மற்றும் ஆடுதுறை - 49 ஆகிய நெல் இரகங்களின் வழித்தோன்றலாக உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
வெளியீடு
தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள TRRI நிறுவனத்தால் 2018 ஆம் ஆண்டு, ஆடுதுறை - 52 நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]
காலம்
நடுநிலை மற்றும் நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 145 - 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாகவும், விதைபிற்கு ஆகத்தின் சம்பாப் நெற்பருவம் ஏற்றதாக கூறப்படுகிறது.[1]
சாகுபடி
பருமழைகளை தாங்கும் திறன் கொண்ட இந்த நெல் வகையை, இந்தியாவின் நடுவண் மண்டலமான - சத்தீசுகர் மற்றும் மகாராட்டிரம் போன்ற மாநிலங்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.[2]
மகசூல்
நடுத்தர அளவிலான மெல்லிய மற்றும் ஒளி ஊடுருவக்கூடிய அரிசியாக கருதப்படும் ஆடுதுறை 52, ஒரு எக்டேருக்கு சுமார் 6050 கிலோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Season and Varieties: Rice ADT 52". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © TNAU 2008 - 2023. Retrieved 2025-06-27.
- ↑ 2.0 2.1 2.2 "Indian Rice Varietal Information". rice-garud.icar-web.com (ஆங்கிலம்) - © 2025. Retrieved 2025-06-27.