கனலி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கனலி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
150 - 180 நாட்கள்
மகசூல்
ஏக்கருக்கு 1800 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
கேரளம்[1][2]
நாடு
 இந்தியா

கனலி (KANALI) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் பாரம்பரிய நெல் வகையாகும். சோறு மற்றும் சிற்றுண்டி வகைகள் சமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் இந்த நெல் இரகத்தின் அரிசி, நெருப்பை போன்ற செந்நிறத்திலும் தடித்தும் காணப்படுகிறது. இதன் அரிசி கனல் (நெருப்பு) போன்று உமிழும் நிறத்தில் இருப்பதால், கனலி எனும் பெயர் பெற்றிருக்கலாம். கனல் என்றால், தமிழில் நெருப்பு, தழல், தணல், தீ, அக்கினி, கங்கு எனறும், மேலும் கனலி என்றால் சூரியன், பகலவன் மற்றும் நெருப்பு என்றும் அறிய முடிகிறது.[1]

மிக நீண்ட கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 150 - 180 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. மேலும் 5 - 6 அடி உயரம் வரை வளரும் இந்த நெற்பயிரின், நெல் தானியங்கள் பழுப்பு நிறமாகவும், நுனியில் ஊதா நிற புள்ளியுடன் காணப்படும் இது, ஒரு ஏக்கருக்கு சுமார் 1800 கிலோ வரை உற்பத்தித் திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது.[1]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 "Native rice varieties of Kerala - KANALI" (PDF). agroecologycentre.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-07-28.
  2. Rice landraces of Kerala State of India: A documentation
"https://tamilar.wiki/w/index.php?title=கனலி&oldid=313770" இலிருந்து மீள்விக்கப்பட்டது