காயம்குளம் - 1
| காயம்குளம் - 1 KYM 1 |
|---|
| வேளாண் பெயர் |
| லட்சுமி |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| கொட்டாரக்கரை - 1 X பொடுவி |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 165-180 நாட்கள் |
| மகசூல் |
| எக்டேருக்கு 5,000 - 5,500 கிலோ |
| வெளியீடு |
| 1981 |
| வெளியீட்டு நிறுவனம் |
| ஓனாட்டுக்கரை வட்டார வேளாண் ஆராய்ச்சி நிலையம், காயம்குளம் |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
காயம்குளம் - 1 (Kym 1), வேளாண் பெயர்; லட்சுமி (Lakshmi), எனப்படும் இந்த நெல் வகை, கொட்டாரக்கரை - 1 மற்றும் பொடுவி ஆகிய நெல் இரகங்களை ஒத்திசைவு அமைப்பு (HS) முறையில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய நெல் இரகமாகும்.[1] தென்னிந்தியாவின் கேரள மாநில ஆலப்புழா மாவட்டம், காயம்குளம் பகுதியில் அமைந்துள்ள "ஓனாட்டுக்கரை வட்டார வேளாண் ஆராய்ச்சி நிலையம்",[2] 1981 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த நெல் இரத்தை பொதுவாக லட்சுமி எனும் வேளாண் பெயரில் அழைக்கப்படுகிறது.[3]
பின்னணி
மிக நீண்டக் கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 165-180 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. இந்நெல் இரகத்தின் அரிசி, நடுத்தர மற்றும் மெல்லிய சிவப்பு நிறமாகும். மேலும் நீர்ப்பாசன வசதியுள்ள பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இதன் நெற்பயிர், சராசரியாக ஒரு எக்டேருக்கு சுமார் 5,000 முதல், 5,500 கிலோ வரை கூல விளைச்சல் தருவதாக கூறப்படுகிறது.[4] இரண்டாம் பயிர் பருவத்திற்கு ஏற்ற இந்நெல் இரகம், இலை சுருட்டுப்புழு, இலையுறை கருகல் நோய் மற்றும் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது, மேலும் தண்டு துளைப்பானுக்கு மிகவும் எதிர்ப்புத் திறன் கொண்டது.[5]
சான்றுகள்
- ↑ "Varieties Released - 33 Kym 1-Lakshmi". kau.in (ஆங்கிலம்) - (List upto 2019). Retrieved 2025-10-03.
- ↑ Onattukara Regional Agricultural Research Station, Kayamkulam - Varieties Released
- ↑ "Onattukara Regional Agricultural Research Station, Kayamkulam - VARIETIES RELEASED - Kym 1-Lakshmi". ormis.kau.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-03.
- ↑ "Indian Rice Varietal Information - Kayakulam-1". rice-garud.icar-web.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-03.
- ↑ "Paddy varieties of Kerala - Long duration varieties - Lakshmi (Kayamkulam-1)". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-03.