கோதண்டன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கோதண்டன்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
150 - 155 நாட்கள்
மகசூல்
ஏக்கருக்கு 1600 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
கேரளம்[1]
நாடு
 இந்தியா

கோதண்டன் (kothandan) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் பாரம்பரிய நெல் வகையாகும். மேலும் வடக்கு வயநாட்டில் பயிரிடப்படும் ஒரு பூர்வீக நெல் வகையான இது, சோறு, சிற்றுண்டி மற்றும் பாயசம் போன்ற உணவுகள் தயாரிக்க பயன்படுகிறது. தடித்த நெல் இரகமான இது வைக்கோல் நிறத்தில் பழுப்பு நிற கோடுகள் மற்றும் நெல்லின் நுனியில் ஊதா நிறக் குறியுடன் காணப்படுகிறது.[1]

நீண்ட கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 150 - 155 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. 5 அடி உயரம் வரை வளரும் இதன் நெற்பயிர், அடிப்பகுதி பச்சை நிறத்தில் காணப்படுகிறது. மேலும் இந்த நெல் இரகம் ஒரு ஏக்கருக்கு 1600 கிலோ வரை உற்பத்தித் திறன் கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்த நெல்லின் அரிசி, சிவப்பு நிறத்தில் உள்ளது. மேலும் இந்த நெல் இரக்கத்தின் வைக்கோல், கூரை வேய்வதற்கு இது சிறந்ததாக கூறப்படுகிறது.[1]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 "Native rice varieties of Kerala - KOTHANDAN" (PDF). agroecologycentre.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-07-24.
"https://tamilar.wiki/w/index.php?title=கோதண்டன்&oldid=343997" இலிருந்து மீள்விக்கப்பட்டது