பத்மா (நெல்)

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பத்மா
Padma
வேளாண் பெயர்
பத்மா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
T 141 X TN 1
வகை
புதிய நெல் வகை
காலம்
120 நாட்கள்
மகசூல்
3,000 - 3,500 கிலோ / எக்டேர்
வெளியீடு
1968
வெளியீட்டு நிறுவனம்
ICAR, NRRI, நடுவண் வகை வெளியீட்டு குழு (CVRC)
மாநிலம்
கட்டக்
நாடு
 இந்தியா

பத்மா (Padma) எனப்படும் இந்த நெல் வகை, T 141 மற்றும் TN 1 ஆகிய நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட இது,[1] அதிக விளைச்சல் தரும் கலப்பின நெல் வகைகளில் ஒன்றாகும்.[2] இந்தியாவின் தலைநகரான தில்லியில் இயங்கிவரும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமமும் (ICAR), இந்திய மாநிலமான ஒடிசாவின் கட்டக் மாவட்டத்தின் தலைநகரங்களில் ஒன்றாக உள்ள கட்டக்கில் செயற்பட்டுவரும் நடுவண் நெல் ஆராய்ச்சி நிலையமும் (NRRI) இணைந்து மேம்படுத்தட்டு, நடுவண் வகை வெளியீட்டு குழு (CVRC) 1968 இல் வெளியிடப்பட்டது.[2]

பின்னணி

நீர்ப்பாசன வசதிப் பெற்ற அணைத்து இந்திய மாநிலங்களிலும் பயிரிடப்படும் இந்நெல் வகை, நடுத்தர கால அளவான, 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. அனைத்து முக்கிய நோய்கள் மற்றும் பூச்சிகளுக்கு சகிப்புத்தன்மை கொண்ட இந்த நெல் இரகத்தின் அரிசி, குறுகிய மற்றும் தடித்தும் காணப்படுகிறது. மேலும் இதன் சராசரி கூல மகசூல் ஒரு எக்டேருக்கு சுமார் 3,000 - 3,500 கிலோ ஆகும். [2] பத்மா IR 8 அளவுக்கு விளைச்சல் தருவதில்லை, IR 8 மகசூலை விட 10 முதல் 20 விழுக்காடு குறைவாக உள்ளது. ஆனால் மகசூல் இழப்பு அரிசியின் தரத்தால் பெருமளவில் ஈடுசெய்யப்படுவதாக கூறப்படுகிறது.[3]

சான்றுகள்

  1. "Indian Rice Varietal Information". rice-garud.icar-web.com (ஆங்கிலம்). 2025. Retrieved 2025-10-24.
  2. 2.0 2.1 2.2 "High Yielding Rice Varieties and Hybrids Developed at NRRI". icar-crri.in (ஆங்கிலம்) © 2019. Retrieved 2025-10-24.
  3. Jaya and Padma -The Promising New Rice Varieties
"https://tamilar.wiki/w/index.php?title=பத்மா_(நெல்)&oldid=425859" இலிருந்து மீள்விக்கப்பட்டது