மங்கொம்பு - 10
| மங்கொம்பு - 10 MO 10 - Remya |
|---|
| வேளாண் பெயர் |
| ரெம்யா (Remya) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| ஜெயா X PTB 33 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 110 - 120 நாட்கள் |
| வெளியீடு |
| 1990 |
| வெளியீட்டு நிறுவனம் |
| நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
மங்கொம்பு - 10 (MO 10 - Remya) எனப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையாகும்.[1] ஜெயா மற்றும் பட்டாம்பி - 33 ஆகிய நெல் இரகங்களை ஒத்திசைந்த அமைப்பு முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட இது,[2] ஒரு கலப்பின புதிய நெல் இரகமாகும். இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 1990[3] ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, ரெம்யா (ரம்யா) என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[2]
பின்னணி
மூன்று பருவங்களிலும் பயிரிட ஏற்ற, நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 110 – 120 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படும் இந்நெல் இரகத்தின் அரிசி, நீண்ட மற்றும் தடித்த, சிவப்பு நிறமாகும். மேலும் பழுப்பு நிறத் தத்துப்பூச்சி, பித்தப்பை பூச்சி, உறைக்கருகல் மற்றும் இலையுறை அழுகல் போன்ற நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்ட இந்நெல் இரகம்,[4] நீரில் முழுகும் காலத்தில் ஒரு மாதம் வரை முளைப்பு செயலற்ற தன்மையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.[5]
சான்றுகள்
- ↑ Paddy varieties of Kerala - Remya (MO 10)
- ↑ 2.0 2.1 "Varieties Released - MO 10-Remya". www.kau.in (ஆங்கிலம்) - List upto 2019. Retrieved 2025-08-29.
- ↑ Varieties released/ identified MO.10 Remya
- ↑ Medium duration varieties Remya (MO 10)
- ↑ "Rice Variety information Kole lands Medium duration Remya (MO-10):". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-08-29.