மங்கொம்பு - 15
| மங்கொம்பு - 15 MO 15 - Remanika |
|---|
| வேளாண் பெயர் |
| ரெமானிகா (Remanika) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| மங்கொம்பு - 1 சடுதிமாற்றம் |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 100 - 105 நாட்கள் |
| வெளியீடு |
| 1998 |
| வெளியீட்டு நிறுவனம் |
| நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
மங்கொம்பு - 15 (MO 15 - Remanika) முன்மொழிவு எண்: (IET - 13981) [1]எனப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையாகும்.[2] ஒரு பாரம்பரிய நெல் வகையான மங்கொம்பு - 1 (MO 1) என்ற நெல் இரகத்தை, மரபியல் பிறழ்வு எனப்படும் சடுதிமாற்று முறையில் உருவாக்கப்பட்ட இது, மரபியல் பிறழ்விற்கு உட்படுத்தப்பட்ட புதிய நெல் இரகமாகும்.[3][4] இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை,[5] ரெமானிகா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[3]
பின்னணி
குறுகிய கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 100 – 105 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது.[6] இந்நெல் இரகத்தின் அரிசி, குட்டையான தடித்த, சிவப்பு நிறமாகும். மேலும் பழுப்பு நிறத் தத்துப்பூச்சி (BPH) மற்றும் பித்தப்பை பூச்சிக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்ட, குள்ள நெல் இரகமாகும்.[7]
சான்றுகள்
- ↑ Indian Rice Varietal Information Name of Variety Remanica (MO-15) (IET-13981)
- ↑ Paddy varieties of Kerala - Remanika (MO 15)
- ↑ 3.0 3.1 "Varieties Released - MO 15-Remanika". www.kau.in (ஆங்கிலம்) - List upto 2019. Retrieved 2025-09-03.
- ↑ ‘Remanika’: A short duration rice for Kuttanad, Kerala
- ↑ Varieties released/ identified MO.15 Remanika 1998
- ↑ Kerala Agricultural University (KAU), Short Duration - Remanika (MO-15)
- ↑ "Rice Variety information Kole lands Medium duration Remanika (MO-15):". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-03.