மங்கொம்பு - 7
| மங்கொம்பு - 7 MO 7 - Karthika |
|---|
| வேளாண் பெயர் |
| கார்த்திகா (Karthika) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| திரிவேணி X ஐஆர் 15399 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 105 - 110 நாட்கள் |
| வெளியீடு |
| 1987 |
| வெளியீட்டு நிறுவனம் |
| நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
மங்கொம்பு - 7 (MO 7 - Karthika) எனப்படும் இந்த நெல் வகை, திரிவேணி மற்றும் ஐஆர் 15399 ஆகிய நெல் இரகங்களை ஒத்திசைந்த அமைப்பு முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட,[1] தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் ஒரு கலப்பின நெல் வகையாகும். இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 1987 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, கார்த்திகா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]
பின்னணி
கேரளத்தின், ஆலப்புழா மாவட்டம், குட்டநாடு பகுதிக்கு ஏற்ற நெல் இரகமாக உள்ள இது, இலை உறை கருகல், இலை உறை அழுகல் மற்றும் பழுப்பு நிறத் தத்துப்பூச்சி (BPH) க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.[2] மேலும் குறுகிய கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 105 – 110 நாட்களில் முதிர்வடைவதாகவும், நீளமான மற்றும் தடித்த, இந்நெல் இரகத்தின் அரிசி, சிவப்பு நிறமாகும்.[3]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 "MO 7-Karthika". www.kau.in (ஆங்கிலம்) - List upto 2019. Retrieved 2025-08-27.
- ↑ "Karthika (MO 7) Medium duration varieties Season : Virippu (I crop / autumn), Mundakan (II crop / winter), Puncha (III crop / summer)". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © TNAU 2025. Retrieved 2025-08-27.
- ↑ "MO 7-Karthika". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 20259. Retrieved 2025-08-27.