காயம்குளம் - 4

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
காயம்குளம் - 4
KYM 4
வேளாண் பெயர்
தன்யா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஜெயா X பட்டாம்பி - 4
வகை
புதிய நெல் வகை
காலம்
160 - 165 நாட்கள்
வெளியீடு
1992
வெளியீட்டு நிறுவனம்
ஓனாட்டுக்கரை வட்டார வேளாண் ஆராய்ச்சி நிலையம், காயம்குளம்
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

காயம்குளம் - 4 (Kym 4), வேளாண் பெயர்; தன்யா (Dhanya), எனப்படும் இந்த நெல் வகை, ஜெயா மற்றும் பட்டாம்பி - 4 ஆகிய நெல் இரகங்களை ஒத்திசைவு அமைப்பு (HS) முறையில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய நெல் இரகமாகும்.[1] தென்னிந்தியாவின் கேரள மாநில ஆலப்புழா மாவட்டம், காயம்குளம் பகுதியில் அமைந்துள்ள " ஓனாட்டுக்கரை வட்டார வேளாண் ஆராய்ச்சி நிலையம்" (RRS),[2] 1992 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த நெல் இரகத்தை பொதுவாக தன்யா எனும் வேளாண் பெயரில் அழைக்கப்படுகிறது.[3]

பின்னணி

நீண்ட கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 160 - 165 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. இந்நெல் இரகத்தின் அரிசி, சிவப்பு நிறமாகும். ஒளி உணர்திறன் கொண்ட இந்நெல் இரகம், தண்டுத் துளைப்பான், பித்தப்பை பூச்சி, உறை கருகல் மற்றும் குலைநோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது என கூறப்படுகிறது.[4]

சான்றுகள்

  1. "Varieties Released - 36 Kym 4-Dhanya". kau.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-06.
  2. Onattukara Regional Agricultural Research Station, Kayamkulam - Varieties Released
  3. "Onattukara Regional Agricultural Research Station, Kayamkulam - VARIETIES RELEASED - Kym 4-Dhanya". ormis.kau.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-06.
  4. "Paddy varieties of Kerala - Long duration varieties - Dhanya (Kayamkulam-4)". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-06.

[[பகுப்பு:இந்தியாவில் வேளாண்மை]

"https://tamilar.wiki/w/index.php?title=காயம்குளம்_-_4&oldid=323507" இலிருந்து மீள்விக்கப்பட்டது