மங்கொம்பு - 14
| மங்கொம்பு - 14 MO 14 - Panchami |
|---|
| வேளாண் பெயர் |
| பஞ்சமி (Panchami) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| மங்கொம்பு - 5 X Pothana |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 115 - 120 நாட்கள் |
| வெளியீடு |
| 1998 |
| வெளியீட்டு நிறுவனம் |
| நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
மங்கொம்பு - 14 (MO 14 - Panchami) முன்மொழிவு எண்: (IET - 14760) [1]எனப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையாகும்.[2] மங்கொம்பு - 5 மற்றும் Pothana ஆகிய நெல் இரகங்களை பரம்பரைத் தேர்வு முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட இது,[3] ஒரு கலப்பின புதிய நெல் இரகமாகும். இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை,[4] பஞ்சமி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[3]
பின்னணி
நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 115 – 120 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது.[5] இந்நெல் இரகத்தின் அரிசி, நடுத்தர மற்றும் தடித்த, சிவப்பு நிறமாகும். மேலும் பழுப்பு நிறத் தத்துப்பூச்சி (BPH) மற்றும் மரபணு மாற்றுப் பயிர் (GM) உயிரியல் வகை-5 (Biotype-5)க்கு தாங்கும் தன்மை கொண்ட, குள்ள நெல் இரகமாகும்.[6]
சான்றுகள்
- ↑ Indian Rice Varietal Information Name of Variety Panchami (MO-14) (IET-14760)
- ↑ Paddy varieties of Kerala - Panchami (MO 14)
- ↑ 3.0 3.1 "Varieties Released - MO 14-Panchami". www.kau.in (ஆங்கிலம்) - List upto 2019. Retrieved 2025-09-01.
- ↑ Varieties released/ identified MO.14 Panchami 1998
- ↑ Kerala Agricultural University (KAU) Medium Duration - Panchami (MO-14)
- ↑ "Rice Variety information Kole lands Medium duration Panchami (MO-14):". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-01.