மங்கொம்பு - 21
| மங்கொம்பு - 21 MO 21 - Pratheeksha |
|---|
| வேளாண் பெயர் |
| பிரதீக்சா (Pratheeksha) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| சதாப்தி (IET 4786) X மங்கொம்பு - 8 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 100-110 நாட்கள் |
| வெளியீடு |
| 2010 |
| வெளியீட்டு நிறுவனம் |
| நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
மங்கொம்பு - 21 (MO 21 - Pratheeksha) எனப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையாகும். சதாப்தி (SATABDI IET 4786) மற்றும் மங்கொம்பு - 8 ஆகிய நெல் இரகங்களை பரம்பரைத் தேர்வு முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட இது, ஒரு கலப்பின புதிய நெல் இரகமாகும். இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, பிரதீக்சா அல்லது பிரத்யசா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]
பின்னணி
குறுகிய கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 100 – 110 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது.[2] இந்நெல் இரகத்தின் அரிசி, நீண்ட மற்றும் தடித்த, சிவப்பு நிறமாகும். மேலும் இலையுறை கருகல், இலையுறை அழுகல் மற்றும் பழுப்பு நிறத் தத்துப்பூச்சிக்கு எதிர்ப்புத் திறனும், மற்றும் அனைத்து பித்தப்பை பூச்சிகளுக்கும் மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டதுமான இந்நெல் இரகம், குட்டநாட்டின் நிலங்களுக்கு உகந்த பயிர் வகையாகும்.[3]
சான்றுகள்
- ↑ "MONCOMPU Rice Research Station, Kerala Agricultural University Kerala - Varieties released/ identified - Mo.21 Pratheeksha" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-07.
- ↑ Kerala Agricultural University (KAU) Short Duration - Pratheeksha (MO-21)
- ↑ "Rice Variety information Kole lands Additional crop Short duration - Prathyasa (MO–21):". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-07.