மங்கொம்பு - 22
Jump to navigation
Jump to search
| மங்கொம்பு - 22 MO 22 - Sreyas |
|---|
| வேளாண் பெயர் |
| சிரேயாசு (Sreyas) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 100-110 நாட்கள் |
| மகசூல் |
| எக்டேருக்கு 7,000 - 7,500 கிலோ |
| வெளியீடு |
| 2015 |
| வெளியீட்டு நிறுவனம் |
| நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
மங்கொம்பு - 22 (MO 22 - Sreyas) எனப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையாகும். இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 2015[1] ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, சிரேயாசு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[2]
பின்னணி
நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 115 – 120 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது.[2] இந்நெல் இரகத்தின் அரிசி, நடுத்தர மற்றும் தடித்த, சிவப்பு நிறமாகும்.[1] மேலும் இலையுறை கருகல், இலையுறை அழுகல் மற்றும் பழுப்பு நிறத் தத்துப்பூச்சிக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. அதிக மகசூல் தரக்கூடிய இந்த குள்ள நெல் இரகம், ஒரு எக்டேருக்கு சுமார் 7,000 முதல், 7,500 கிலோ வரை கூல மகசூல் தருவதாக கூறப்படுகிறது.[1]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 "Varieties Released - Official Website System of the Kerala Agricultural University - MO 22". www.kau.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-08.
- ↑ 2.0 2.1 "Kerala Agricultural University (KAU) Short Duration - Sreyas MO 22". www.celkau.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-08.