கருடத்வனி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

கருடத்வனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.[1][2]

இலக்கணம்

கருடத்வனி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
கருடத்வனி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி231 ப த2நி3 ச்
அவரோகணம்: ச் த2 ப க3 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூரண ஔடவ" இராகம் என்பர்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  2. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
"https://tamilar.wiki/w/index.php?title=கருடத்வனி&oldid=315970" இலிருந்து மீள்விக்கப்பட்டது