ஆபேரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Ramkumar Kalyani பயனரால் செய்யப்பட்ட 10:07, 28 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஆபேரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22வது மேளகர்த்தா இராகமும், "வேத" என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

படிமம்:உதயரவிச்சந்திரிகா.svg
ஆரோகணம் உதயரவிச்சந்திரிகாவின் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
படிமம்:கரகரப்பிரியா.svg
அவரோகணம் கரகரப்பிரியாவின் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), கைசிக நிசாதம் (நி2), சதுச்ருதி தைவதம் (த2), சதுச்ருதி ரிசபம் (ரி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:

ஆரோகணம்: ச க21 ப நி2 ச்
அவரோகணம்: ச் நி22 ப ம12 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ சம்பூரண" இராகம் எனப்படுகின்றது.

உருப்படிகள்[2]

வகை பாடல் தாளம் கலைஞர்
கிருதி நகுமோமு ஆதி தியாகராஜர்
கிருதி வினாபேரி ஆதி முத்துசுவாமி தீட்சிதர்
கிருதி ஏகாம்பர நாதா ஆதி பெரியசாமித்தூரன்
கிருதி கந்தா வந்தருள் ஆதி பாபநாசம் சிவன்
கிருதி என்னை எனக்கு ரூபகம் முத்துத்தாண்டவர்
கிருதி நின்னுவினா ரூபகம் சியாமா சாஸ்திரி

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. Music Handbook - Raga Index -A 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. பக்கம் எண்கள்: 147 & 148, இந்திய இசைக்கருவூலம் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.), ஆசிரியர்: டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆபேரி&oldid=264408" இலிருந்து மீள்விக்கப்பட்டது