பரசு

தமிழர்விக்கியிலிருந்து
imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 10:30, 7 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: பட்டணம் சுப்பிரமணிய ஐயர் → பட்டணம் சுப்பிரமணிய ஐயர் (2) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பரசு இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

படிமம்:பரசு ஆரோகணம்.svg
பரசு ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
படிமம்:மாயாமாளவகௌளை.svg
பரசு அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த1), காகலி நிசாதம் (நி3), சுத்த ரிசபம் (ரி1) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச க31 ப த1 நி3 ச்
அவரோகணம்: ச் நி31 ப ம13 ரி1

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் எல்லாச் சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ சம்பூரண" இராகம் என்பர்.

உருப்படிகள்[1]

வகை உருப்படி தாளம் கலைஞர்
கிருதி " ஸ்ரீசுப்ரபகவந்தம் " அட முத்துசுவாமி தீட்சிதர்
கிருதி " நீலயதாட்சி " மிஸ்ரசாபு சியாமா சாஸ்திரி
கிருதி " திரிலோக மாதா " மிஸ்ரசாபு சியாமா சாஸ்திரி
கிருதி " அடிமலரினை " ஆதி பாபநாசம் சிவன்
கிருதி "சர்வமங்கள" மிஸ்ரசாபு முத்தையா பாகவதர்
கிருதி " ஜகந்நாதா " ஆதி வேதநாயகம் பிள்ளை
பதம் " இந்தா விபீஷணா " மிஸ்ரசாபு அருணாசலக் கவிராயர்
ஜாவளி " சொல்லிநெனகு " ஆதி பட்டணம் சுப்பிரமணிய ஐயர்
தில்லானா " ததீம்தீம்த " ஆதி பட்டணம் சுப்பிரமணிய ஐயர்
தரு " வரமைன " மிஸ்ரசாபு தியாகராஜ சுவாமிகள்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.

உசாத்துணைகள்

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://tamilar.wiki/w/index.php?title=பரசு&oldid=426274" இலிருந்து மீள்விக்கப்பட்டது