மங்கொம்பு - 24

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மங்கொம்பு - 24
MO 24 - Aadhya
வேளாண் பெயர்
ஆதியா (KAU Aadhya)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
மங்கொம்பு - 16 X தவளைக் கண்ணன்
வகை
புதிய நெல் வகை
காலம்
115-120 நாட்கள்
மகசூல்
எக்டேருக்கு 6,500 - 7,000 கிலோ
வெளியீடு
2025
வெளியீட்டு நிறுவனம்
நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

மங்கொம்பு - 24 (KAU Aadhya (MO 24) சுட்டுப்பெயர்: (KAUM 180-2), முன்மொழிவு எண்: (IET 25996) எனப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையாகும். மங்கொம்பு - 16 மற்றும் கேரளாவின் பாரம்பரிய நெல் வகையான தவளைக் கண்ணன் ஆகியவற்றுக்கு இடையேயான கலப்பினத்திலிருந்து உருவாக்கப்பட்ட இந்த நெல் இரகத்தை, இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு, கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் நெல் ஆய்வு நிலையம், மார்ச்சு 2, 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, ஆதியா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]

பின்னணி

நடுத்தர கால அளவில் அறுவடை செய்ய, 115 – 120 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. இந்நெல் இரகத்தின் அரிசி, குறுகிய மற்றும் தடித்த, வெள்ளை நிறமாகும். அதிக மகசூல் தரக்கூடிய இந்த நெல் இரகம், சராசரியாக ஒரு எக்டேருக்கு சுமார் 6,500 முதல், 7,000 கிலோ வரை கூல மகசூல் தருவதாக கூறப்படுகிறது.[2]

சான்றுகள்

  1. "KAU Aadhya (MO 24): A High Yielding White Kernelled Rice Variety for Kerala". sarr.co.in (ஆங்கிலம்) - Volume 18-(1), 2025. Retrieved 2025-09-09.
  2. "KAU Aadhya (MO 24): A High Yielding White Kernelled Rice Variety for Kerala" (PDF). sarr.co.in pdf (ஆங்கிலம்) - 2025, Vol 18, No. 1. Retrieved 2025-09-09.
"https://tamilar.wiki/w/index.php?title=மங்கொம்பு_-_24&oldid=456452" இலிருந்து மீள்விக்கப்பட்டது